Feed Item
·
Added a news

 

எந்த காரணங்களுக்காகவும் 2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், திட்டமிடப்பட்ட வகையில் எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரையில் பரீட்சைகள் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரப்பப்படும் போலி தகவலுக்கு ஏமாற்றமடைய வேண்டாம் எனவும் அவர் பரீட்சார்த்திகளை அறிவுறுத்தியுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளிப்படுத்தப்படும் பரீட்சைகள் கால அட்டவணையை மாத்திரம் பின்பற்றுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பரீட்சைகள் திணைக்களத்தினால் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படும் தகவல்கள் தவிர்ந்த சமூக வலைத்தளங்களில் பரப்படும் தகவல்களை நம்ப வேண்டாமெனவும் அவர் கோரியுள்ளார்.

000

  • 978