இன்று அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று சொத்துக்காக அடித்து கொள்ளும் இந்த காலத்தில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்த நடிகர் சுமன் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
பிரபல நடிகர் சுமன். 80களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தவர். தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அப்படத்தின் அறிமுக நிழ்ச்சியில் பேசியதாவது,
இந்த படத்தில் எனக்கு நல்ல ஒரு கதாப்பாத்திரத்தையும், அதை சிறப்பாக செய்ய சுதந்திரத்தையும் கொடுத்த விஜய்க்கு நன்றி. 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இந்த கதை மிகவும் புதுமையாக இருந்தது.
நமது நாட்டின் உண்மையான வாட்ச்மேன்கள் ராணுவ வீரர்கள்தான். நாம் நிம்மதியாக வாழ அவர்கள் உறையும் பனியில் காவல் புரிகிறார்கள். அவர்களுக்குள் ஜாதி, மத பேதமில்லை. ஆனால் நாம்தான் ஜாதி, மதத்தின் பெயரால் கலவரம் செய்து கொண்டிருக்கிறோம்.
ஹைதராபாத் அருகில் எனக்கு 175 ஏக்கர் நிலம் உள்ளது. அதை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்துக்கு கொடுக்கலாம் என்று எனது மனைவி கூறினார்.
நானும் அந்த முடிவை வரவேற்றேன். நாம் உயிரோடு இருப்பதற்கு நாட்டின் எல்லையில் எந்தவித வசதியும் இல்லாமல் கடுமையான சூழ்நிலையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்புப்படை வீரர்கள் நாட்டை பாதுகாத்துவருகின்றனர். இதை உணர்ந்ததும் நான் முழுமனதோடு எனது 175 ஏக்கர் நிலத்தை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அளிக்க முன்வந்தேன்’’ என்று நடிகர் சுமன் கூறினார்.
- 968