Feed Item

தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஐப்பசி மாதம் 14ஆம் தேதி

 

மேஷம் -ராசி:

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதியவர்களின் அறிமுகங்களால் மாற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

ரிஷபம் ராசி:

நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கி அமைதி பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை

 

மிதுனம் -ராசி:

பலதரப்பட்ட சிந்தனைகளால் மன அமைதியின்மை ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொருளாதார செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் மீதான கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பார்த்த உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம் -ராசி:

தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

சிம்மம் -ராசி:

மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். இயந்திர பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கன்னி -ராசி:

செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாக்குவன்மை மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

 

துலாம் -ராசி:

உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

விருச்சிகம்- ராசி:

உத்தியோகப் பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரப் பணிகளில் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் மூலம் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வுகள் கிடைக்கும். உலக அனுபவம் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். வெளியூர் பயணங்களில் புதிய அறிமுகம் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

தனுசு -ராசி:

உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகப் பணிகளில் மேன்மை உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மகரம் -ராசி:

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். புதுவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கும்பம் –ராசி:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவார்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மீனம் -ராசி:

குடும்பத்தில் உங்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். உழைப்பிற்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பூர்வீக பிரச்சனைகளில் பொறுமை காக்கவும். இளைய சகோதரர்கள் மூலம் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

  

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 1088