Feed Item
·
Added article

தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகையை இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.   

கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. நாக சைதன்யா - சோபிதா துலிபாலா தம்பதியினரின் திருமணம் எப்போது என்ற சந்தேகம் பலரிடம் இருந்து வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சோபிதா வீட்டில் பந்தக்கால் நடும் புகைப்படங்களை சோபிதா பகிர்ந்துள்ளார்.

ஹைதராபாத்தில் ஏஎன்ஆர் விருது விழா நேற்று நடந்தது. அதில் சோபிதா வரும் வரை விழா நடந்த அரங்கத்தின் வெளியே காத்திருந்த சைதன்யா, சோபிதா வந்தவுடன் கொஞ்சம் நேரம் பேசி விட்டு சென்று விட்டார்.

திருமணம் முடிந்த பின்னர் சோபிதா, நாக சைதன்யா வீட்டிலேயே செட்டில் ஆனால் எங்கே சமந்தாவுக்கு வந்த நிலைமை தனக்கும் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பதாகவும், திருமணத்திற்கு பின்னர் தனி குடுத்தனம் சென்றுவிட வேண்டும் என்றும் நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலா கண்டிஷன் போட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

  • 918