Feed Item
·
Added a post

வாழைப்பழத்தில் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. உடல் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் அதிகமாக காணப்படுகின்றது.

இவ்வளவு நன்மைகளை கொண்ட வாழைப்பழத்தை நாம் சரியான முறையில் சாப்பிடுவது முக்கியமாகும். இப்பழத்துடன் சில உணவுகளை சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படும்.  

சிலர் வாழைப்பழத்துடன் சோறு சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர்..ஒரு வாழைப்பழத்தில் 20கி கார்போஹைட்ரேட் உள்ளது. 200 கிராம் சாதத்தில் 60கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இது இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

வாழைப்பழம் தயிர் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் அதிகம். இது தவறு.வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும்.

இதனால் உடலில் பல பிரச்சனைகள் வரும். இதனால் நீங்கள் வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு சுமார் 2 மணி நேரம் கழித்து தான் தயிர் சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணிர் குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது தவறான பழக்கமாகும். வாழைப்பழம் சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகள் வரும்.

சளி, காய்ச்சல், இருமல் போன்றவையும் வரலாம். எனவே வாழைப்பழம் சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வாழைப்பழம் குளிர்ச்சியானது. முட்டை சூடான தன்மையுடையது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழைப்பழத்தையும் முட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும்.

வாழைப்பழத்துடன் எந்த ஒரு அசைவ உணவுகளையும் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக வாழைப்பழத்துடன் மீன் சேர்த்து சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும்.

  • 916