தவெக மாநாட்டை தொகுத்து வழங்கியவர் துர்கா தேவி(28). தனியார் கல்லூரி விரிவுரையாளர். இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. விஜயின் ரசிகையாக இருந்தவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்திருக்கிறார். மக்கள் இயக்க நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய துர்கா தேவியை, சமீபத்தில் கட்சி துவங்கிய பிறகு கழகப் பேச்சாளராக தவெக அறிவித்துள்ளது.
தவெகவின் முதல் மாநாட்டை தொகுத்து வழங்கினார். பலர் இவரது திறமையை பாராட்டிய நிலையில், குரலை ட்ரோல் செய்தும் வந்தனர். இதுகுறித்து பேசியுள்ள அவர், அந்த விமர்சனங்களையெல்லாம் பார்த்துட்டு சிரிப்பு வந்துடுச்சு.
எனக்கு ஒரு பின்புலம், ஒரு நிறம் இருந்தாதான் ரசிப்பீங்களா? பாராட்டுவீங்களா? ரெஸ்பான்ஸ் கொடுப்பீங்களா? நல்ல குரல், வெளீர் நிறம் இருக்கணும்னு நினைப்பதே தவறான சிந்தனை. நான் தமிழச்சி. தமிழ் மண்ணை; தமிழ் மக்களை நம்பித்தான் பேசினேன்.
எல்லா மேடையிலும் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் அப்படின்னுதான் பேசவே ஆரம்பிப்பேன். அப்படியிருக்கும்போது, என்னோட குரலை, நிறத்தை வெச்சு விமர்சிக்கிறதை ஏற்றுக்க முடியாது. திறமையைத்தான் பார்க்க வேண்டும்.
மாநாட்டுக்கு 8 லட்சம் பேர் வந்திருந்தார்கள். அத்தனை ஆண்கள் கூட்டத்தை ஒரு 28 வயசு இளம்பெண் குரலால் கட்டுக்குள் வெச்சிருந்ததைத்தான் முக்கியமா பார்க்கணும். பேசுறதுக்காக எனக்கு எந்த முன் தயாரிப்பும் கொடுக்கல. எல்லாமே, அந்த சூழலையொட்டி நானே பேசினது. ரொம்ப பெருமையா இருக்கு என தெரிவித்துள்ளார்.
- 1488