Feed Item
·
Added a news

கொழும்பு - கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான வடக்கு ரயில் சேவை நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரதத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதால் ரயில் மார்க்கத்தின் ஊடான கடவுப் பாதைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • 2242