Feed Item
·
Added a news

சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது.

புனேயில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட தொடரை நியூஸிலாந்து 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது டெஸ்ட்டில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ஓட்டங்களை பெற்றது.

எனினும், இந்திய அணியால் முதல் இன்னிங்ஸில் 156 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

இந்தநிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 255 ஓட்டங்களை பெற்றபோதும், இந்திய அணியால் வெற்றி பெறுவதற்கான இலக்கு ஓட்டங்களை பெறமுடியவில்லை

அந்த அணி, 245 ஓட்டங்களில் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களால் தோல்வியடைந்தது

00

  • 2195