Feed Item
·
Added a news

நடப்பு ஆண்டின் மகளிர் 20 க்கு 20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளுக்காக, அனுபவம் வாய்ந்த நான்கு நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் நிமாலி பெரேரா, ஜமேக்காவின் ஜாக்குலின் வில்லியம்ஸ், தென்னாபிரிக்காவின் லோரன் ஏஜென்பேக் மற்றும் அவுஸ்திரேலியாவின் கிளாரி பொலோசாக் ஆகிய நான்கு பேரே அரையிறுதிகள் மற்றும் இறுதிப்போட்டியின் நடுவர்களாக செயற்படவுள்ளனர்.

இதன்படி இன்று நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான அரையிறுதிப் போட்டிக்கு நிமாலி பெரேரா மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் நடுவர்களாக செயற்படுவார்கள் என்றும், மூன்றாவது நடுவராக இங்கிலாந்தின் அன்னா ஹாரிஸ் செயற்படவுள்தாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும், நான்காவது நடுவராக நியூஸிலாந்தின் கிம் கொட்டன் மற்றும் போட்டி நடுவராக இலங்கையின் மிச்செய்ல் பெரேரா ஆகியோர் இணைந்துகொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் நியூசிலாந்தை சார்ஜாவில் எதிர்கொள்ளும் இரண்டாவது அரையிறுதியில், தென்னாப்பிரிக்காவின் ஏஜென்பேக் மற்றும் அவுஸ்திரேலிய பொலோசாக் ஆகியோர் நடுவர்களாக செயற்படுவார்கள்.

இருவருடன் அவுஸ்திரேலியாவின் எலோயிஸ் செரிடன் மூன்றாவது நடுவராகவும், இந்தியாவின் விருந்தா ரதி நான்காவது நடுவராகவும் இணையவுள்ளனர். மேலும், போட்டி நடுவராக இந்தியாவின் ஜி.எஸ்.லட்சுமி செயற்படவுள்ளார்

000

  • 1103