Feed Item
·
Added a news

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் சரித் அசலங்க 59 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்தநிலையில் 180 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 எனும் அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.

000

  • 1335