வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் அற்ற தேசமாக பங்களாதேஷ் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று பங்களாதேஷ் ட்ரான்ஸ்ரேன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பன்மைத்துவத்திற்கு எதிராக வெறுப்பு மற்றும் விரோதத்தைப் பரப்புவதற்கான முயற்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது என அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இப்தேகாருஸ்ஸமான் கேட்டுள்ளார்.
பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக முன்னெடுத்த போராட்டத்தின் ஊடாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதோடு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
- 900