Feed Item
·
Added a news

முல்தானில் இங்கிலாந்து கிரிக்கெட் நட்சரத்திரங்களான ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் அசுரத் தனமான இணைப்பாட்டத்துடன் சில குறிப்பிடத்தக்க டெஸ்ட் சாதனைகளை தகர்த்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்களை பதம் பார்த்த இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 454 ஓட்டங்களை குவித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிகடியான இணைப்பட்ட ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

இதேவேளை, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது மிக உயர்ந்த இணைப்பாட்டமாகவும் இது பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக 1957 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான‍ போட்டியில் அப்‍போதைய இங்கிலாந்து வீரர்களான பிபிஹெச் மே, எம்சி கௌட்ரே ஆகியோர் 411 ஓட்டங்களை குவித்திருந்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், ஜோ ரூட் 375 பந்துகளில் 262 ஓட்டங்களை குவித்தார். அவரது இன்னிங்ஸில் 17 பவுண்டரிகள் அடங்கும்.

மறுபுறம் ஹாரி புரூக், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 300 ஓட்டங்களை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஆறாவது இங்கிலாந்து துடுப்பாட்ட வீரராகவும் அவர் மாறினார்.

புரூக்கின் 317 ஓட்டங்கள் வெறும் 322 பந்துகளில் வந்தது. அவரது இன்னிங்ஸில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 29 பவுண்டரிகளும் அடங்கும்.

இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் அடித்த இரண்டாவது வீரராக அவர் ஆனார்.

2008 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய நட்சத்திரம் வீரேந்திர சேவாக், 278 பந்துகளில் முச்சதத்தை பூர்த்தி செய்திருந்தார்.

ரூட் மற்றும் புரூக் இப்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் தலா 250 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது ஜோடி ஆனார்கள்

1958 இல் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கான்ராட் ஹன்டே (260), கேரி சோபர்ஸ் (365) ஆகியோர் இந்த அரிய சாதனையை ஆரம்பத்தில் பதிவு செய்திருந்தனர்

அதன் பின்னர், 2006 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை நட்சத்திரங்களான மஹேல ஜெயவர்த்தனே (374), குமார் சங்கக்கார (287) ஆகியோர் இந்த சாதனையை படைத்தனர்.

ரூட் மற்றும் புரூக்கின் இந்த துடுப்பாட்டம் இங்கிலாந்துக்காக புதிய சாதனைகளை படைத்தது மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த இணைப்பாட்டத்தில் அவர்களின் இடத்தையும் பிடித்தது.

அவர்களின் சிறப்பான ஆட்டத்தால், முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானின் 556 ஓட்டங்களை விஞ்சி, இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 823 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது.

000

  • 1715