இன்று சமையலறையில் முக்கிய இடம் வகிப்பது ப்ரிட்ஜ் தான். சிலரது வீட்டில் ப்ரிட்ஜை திறந்ததும் வரும் துர்நாற்றம் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும். இதற்கு ஒரே தீர்வு மாதம் ஒரு முறை ப்ரிட்ஜை சுத்தம் செய்வது தான்.
இதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதும். ப்ரிட்ஜை சுத்தம் செய்ய சரியான நேரம் ப்ரிட்ஜில் குறைவாக பொருட்கள் இருக்கும்போது தான். அப்போது தான் சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.
1.சுத்தம் செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக ப்ரிட்ஜ் மற்றும் ஸ்டெப்லேசரின் மின் இணைப்பை நிறுத்த வேண்டும். இதனால் ஃபீரீசர் மற்றும் ப்ரிட்ஜில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.
2.இப்போது ப்ரிட்ஜில் உள்ள பொருட்களை அதன் தட்டில் உள்ளவாறே தனித்தனியாக வெளியேற்ற வேண்டும். இது மீண்டும் பொருட்களை அடுக்க வசதியாக இருக்கும்.
3.ப்ரிட்ஜில் உள்ள தட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக கழட்டவும். அவ்வாறே ஸைடில் உள்ள கண்டெய்னர்களையும் கழட்டவும். இதனை சோப்பு அல்லது ஜெல் வைத்து நன்றாக கழுவி காய விட வேண்டும்.
4.இப்போது ப்ரிட்ஜ் முழுவதும் வெற்றிடமாக இருக்கும். ஒரு கப்பில் விம் ஜெல் மற்றும் நீரை எடுத்து கொண்டு ஸ்பான்ச்யை அதில் நனைத்து ப்ரீசர் மற்றும் ப்ரிட்ஜ் உள்ளே நன்கு துடைத்து எடுக்க வேண்டும்.
5.பிறகு காய்ந்த துணியால் உள்ளே ஈரம் இல்லாமல் நன்கு துடைக்க வேண்டும்.
6.ப்ரிட்ஜின் வெளிப்புறம் நீரை ஸ்ப்ரே செய்து காட்டன் துணியால் துடைக்கவும்.
7.ப்ரிட்ஜை ஒரு மணி நேரம் திறந்து வைத்து நன்கு உலர விட வேண்டும்.பிறகு தட்டு மற்றும் கண்ட்டெய்னர்களை இருந்தவாறே செட் செய்து பொருட்களை மீண்டும் அடுக்க வேண்டும்
அவ்வளவு தான் உங்கள் ப்ரிட்ஜ் இப்போது பளீச்...
- 1713