Feed Item
·
Added a post

பொதுநலன் கருதி வெளியீடு 😊

1. சீலிங் ஃபேனைத் துடைக்கும் முன் முதலில் காய்ந்த துணியால் துடைத்து விட்டு பின்  ஈரத்துணியில் துடைக்கவும் இல்லை என்றால் தூசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக் கொள்ளும்

2. லாப்டில் உள்ள பொருட்களை எடுக்கும் போது #பொறுமையாக எடுக்கவும். கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம். மண்ட பத்திரம்

3. சீலிங் ஃபேன்களை ஆப் செய்து விட்டு பிறகு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும். இல்லையேல் இறக்கையில் சிரம்,கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்

4. ஒட்டடை அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக் கொண்டால் தூசு தும்புகள் கண்,வாய்,தலையில் விழாமல் தடுக்கலாம்

5. இத்தனை வேலைகள் கஷ்டப்பட்டு செய்த பின்னால் ''என்ன கிளீன் பண்ணிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு" என்று ஒரு அசரீரி கேட்கும்.

அதைக் கேட்டுப் பொங்கி எழாமல் சட்டையைப் போட்டுக் கொண்டு அருகில் உள்ள பேக்கரிக்குச் சென்று ஒரு கப் காபி சாப்பிடவும். அதனால் மேற்படி டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம்.

பாதுகாப்புடன் ஆயுதபூஜையை கொண்டாடுவீர்

  • 2133