தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி
மேஷம் -ராசி:
அலுவல் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ரிஷபம் ராசி:
வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
மிதுனம் -ராசி:
எதிர்கால சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வித்தியாசமான அனுபவங்களால் புரிதல் உண்டாகும். பணியில் மாற்றமான சூழல் அமையும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வர்த்தக வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம் -ராசி:
குடும்பத்தில் புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அரசு காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம் -ராசி:
எண்ணிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் அனுபவம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். பரிசு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி -ராசி:
தடைபட்ட வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் மதிப்பு மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். மனதில் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம் -ராசி:
கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். கம்பீரமான பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
விருச்சிகம்- ராசி:
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளி வட்டாரங்களில் அலைச்சல் மேம்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்புக்கு உண்டான லாபம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முதலீடுகளில் விவேகம் வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
தனுசு -ராசி:
மனதளவில் புதிய தேடல் பிறக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம் -ராசி:
வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அணுகு முறையில் சில மாற்றங்கள் உண்டாகும். பேச்சு வன்மையால் அனுகூலம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம் –ராசி:
புதிய முயற்சிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விருப்பமான விஷயங்களை தைரியமாக செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபாரத்தில் ஆதாயமான சூழல் அமையும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மீனம் -ராசி:
எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். திட்டமிட்ட சில காரியங்களில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 2344