சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தையும் தயாரித்துள்ளது என்பதும், 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் டீசர் அவசர அவசரமாக தயாராகி வருவதாகவும், ’வேட்டையன்’ படத்தின் இடைவேளையின் போது 'விடாமுயற்சி' படத்தின் டீசர் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
’வேட்டையன்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
- 2513