இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதும், உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க இராணுவத்துக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலைப் பற்றி விவாதிக்கவும், புதிய தடைகள் உள்பட இந்தத் தாக்குதலுக்கான பதிலை ஒருங்கிணைக்கவும் ஜி7 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.
மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளேன் என, ஜனாதிபதி ஜோ பைடன் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
- 1408