Feed Item
·
Added a news

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 4 ஆம் திகதி) இலங்கை வரவுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இந்நாட்டுக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி இவராவார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட புதிய அரச தரப்பினருடனும், தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடனும் மற்றும் சிவில் சமூகத்தினருடனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது டில்லி வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை, ஜனாதிபதி அநுரகுமாரவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 1069