தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, புரட்டாசி மாதம் 17 ஆம் தேதி
மேஷம் -ராசி:
நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழல் அமையும். தடைபட்ட சில காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
ரிஷபம் ராசி:
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கல்வியில் சில மாற்றமான சூழல் அமையும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். பிரபலமானவர்களின் தொடர்பு உண்டாகும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம் -ராசி:
நினைத்த பணிகள் தடையின்றி முடியும். உறவுகளின் வழியில் ஒற்றுமை உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களால் திருப்தியான சூழல் அமையும். குழப்பம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம் -ராசி:
உடன்பிறந்தவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வருவாயை மேம்படுத்துவதற்கு சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். நெருக்கடியான சூழல் படிப்படியாக மறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம் -ராசி:
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நல்லது. புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான ஒப்பந்தங்களில் பொறுமை வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அசதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி -ராசி:
கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பிறரின் பணிகளை குறை சொல்லாமல் இருப்பது நன்மை தரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். வர்த்தகச் செயல்களில் விவேகம் வேண்டும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம் -ராசி:
வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மிகத்தில் தெளிவு பிறக்கும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்- ராசி:
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
தனுசு -ராசி:
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். காப்பீடு துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். உத்தியோகத்தில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம் -ராசி:
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். அணுகுமுறைகளில் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வீடு, வாகனங்களை சரி செய்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதுவிதமான உத்வேகம் பிறக்கும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கும்பம் –ராசி:
கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். குடும்ப விவகாரங்களில் அந்நியர்களின் தலையீட்டை தவிர்க்கவும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். உடல்நிலை சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம் -ராசி:
வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். மனதளவில் உற்சாகமான சிந்தனைகள் உண்டாகும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். கற்பனை துறைகளில் மேன்மை ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 1048