Feed Item

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளது. விக்டோரியாவிற்கு தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறு தீவு ஒன்றில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 4ம் திகதி வரையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பயிற்சி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய தேசிய பாதுகாப்பு திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

நாள்தோறும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

  • 1579