Feed Item
·
Added a post

ஜப்பான் நாட்டில், சீக்கிரமாக பணியிடத்திற்கு வரும் ஊழியர்கள் பார்க்கிங் லாட்டில் தூரமாக வண்டியை நிறுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அப்படிச் செய்வதால், தாமதமாக வருபவர்களுக்கு கட்டிடத்திற்கு அருகில் நிறுத்தும் வசதி கிடைத்து நேரத்திற்கு அலுவலகம் செல்ல உதவியாக அமைந்துவிடுகிறது.

இந்த நடைமுறை பரஸ்பர மரியாதை மற்றும் பணியிடத்தில் அடுத்தவருக்கான கரிசனையை அதிகம் வலியுறுத்துகிறது.

தாமதமாக வருபவர்களுக்கு எளிதாக பார்க்கிங் செய்ய உதவுவதன் மூலம் சீக்கிரம் வருபவர்கள் தங்கள் சக ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சிந்தனைமிக்க செயல் ஒரு கூட்டுறவு சூழலை வளர்க்கிறது. வேலையில் நல்லிணக்கம், பச்சாதாபம் மற்றும் குழுப்பணி ஆகியவற்றின் முக்கியத்துவம் தான் ஜப்பானிய கலாச்சாரம்.

முக்கியமாக தனிநபரின் வசதியை விட கூட்டு நல்வாழ்வை வலியுறுத்தும் கலாச்சாரம்..

That's a small but thoughtful gesture by Japanese people

நமக்கு எப்படி வசதி என்று மட்டும் பார்க்காமல் பிறருக்கும் எது வசதி என்று பார்ப்பதால் தான் அவர்கள் இன்னும் வளர்ந்து முன்னேறிச் செல்கிறார்கள்..

பிறருக்காக யோசிப்பது சிறந்த பண்பு.. கூடுமானவரை பின்பற்றுவோம்!

  • 1517