தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அஞ்சல் திணைக்களத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
அஞ்சல் வாக்கு பாதுகாப்பு பொதியைக் கையாளும் முறைமை, மற்றும் அதற்குரிய காலப்பகுதி என்பன இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.
அத்துடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை, வாக்காளர்களின் வீடுகளுக்கு விநியோகிக்கும் வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக 10 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக 7 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
- 1472