Feed Item
·
Added a news

மேக் இன் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடி கருத்துரைக்கின்றார்.

ஒவ்வொரு துறையிலும் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக கூறிய அவர் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு அதன் வெற்றிக்கு சாட்சியாகும் என்றும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி,

நாம் அனைவரும் நமது பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். நான் அமெரிக்கா சென்றிருந்த போது இந்தியாவை சேர்ந்த 300 கலைப்பொருட்கள் மீட்டு கொண்டு வரப்பட்டன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது தனிப்பட்ட இல்லத்தில் கலைப்பொருட்கள் சிலவற்றை எனக்குக் காட்டினார். மீட்கப்பட்ட கலைப்பொருட்கள் டெரகோட்டா, கல், தந்தம், மரம், தாமிரம் மற்றும் வெண்கலம் போன்ற பொருட்களால் ஆனவை” என்றார்.

000

  • 1455