Feed Item
·
Added a news

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தின் கல்கரியில் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கல்கரியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கல்கரி போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மெடேவ்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மரணங்கள் சந்தேகத்திற்கிடமானவை என போலீசார் தெரிவிக்கின்றனர். விசாரணைகள் ஆரம்பகட்டத்தில் காணப்படுவதாகவும் இதனால் மேலதிக விபரங்களை வெளியிட முடியாது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் போலீசாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

  • 1777