பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மிதுன் தா என்றும் அழைக்கப்படும் மிதுன் சக்ரவர்த்தி, ஒரு நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியும்கூட. அவர் தனது பலவகையான பாத்திரங்கள் மற்றும் தனித்துவ நடன பாணிக்காக கொண்டாடப்படக் கூடியவர்.
ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களாக நீடித்த திரைப்பட வாழ்க்கையில், மிதுன் சக்ரவர்த்தி ஏராளமான விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இது இந்திய சினிமாவுக்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்துள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் செய்த சிறந்த பங்களிப்புகளுக்காக அண்மையில் மதிப்புமிக்க பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 2024 அக்டோபர் 8 செவ்வாயன்று நடைபெறவுள்ள 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.
மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது, மிதுன் சக்ரவர்த்தியின் கலை வலிமையை அங்கீகரிப்பது மட்டுமின்றி, பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய கருணையுள்ள, அர்ப்பணிப்புள்ள தனிநபராக அவரது நீடித்த மரபையும் அங்கீகரிக்கிறது.
- 1790