ஆதி சங்கரர் தினமும் பிச்சை ஏற்று தன் குரு நாதருக்குக் கொடுத்த பின்னரே தான் உண்பது வழக்கம். ஒரு முறை ஏகாதசி விரதம் இருந்த சங்கரர் மறு நாள் துவாதசியன்று பிச்சைக்குப் புறப்பட்டார். அயாசகன் என்னும் ஏழையின் வீட்டிற்குச் சென்றபோது
அங்கிருந்த பெண்ணிடம் பிச்சை கேட்டார்.
உண்ண ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த காய்ந்த நெல்லிக்கனியை அவர் கையில் கொடுத்து மகிழ்ந்தாள்
அப்பெண். அதைப் பெற்றுக்கொண்ட சங்கரர் , அவளது வறுமையை நீக்க மஹாலட்சுமியிடம் வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம்பாடினார். உடனே மஹா லட்சுமியின் அருளால் அவளது வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பெய்தது.
இவ்வாறு நடந்த தலம் கேரளாவில் உள்ள காலடி. ஆதி சங்கரர் அவதரித்த தலமும் இதே. இங்கு அட்சய திருதியை சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.அன்று கனகதாரா யாகம் செய்யப்படுகிறது. மக்கள் ஆதி சங்கரரை வழிபடும் நாளும் இதுவே.
- 1897