உலகின் மாவீரன் எனப்போற்றப்படும் அலெக்ஸாண்டர் போரஸை எப்படியும் வீழ்த்துவதற்காகப் கிட்டத்தட்ட பதினோரு நாட்களில் சுமார் மூவாயிரம் மைல்களைக் கடந்து செல்கிறார். அவருடைய வலிமைமிக்கச் சிப்பாய்கள் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காத காரணத்தால் பயணவழியில் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.
வீரர்கள் பயணிக்கும் பாதையில் எதிர்த்திசையில் பயணித்து வந்த மாசிடோனியாவைச் சார்ந்த ஒருசில பயணிகள் தாங்கள் அருந்தக் (தன்பகுதி நதியிலிருந்து )கொண்டு வந்த நீரை தாகத்தில் தவித்து கொண்டிருந்த மாவீரன் அலெக்ஸாண்டருக்கு குடிக்கக் குடித்தனர். அலெக்சாண்டர் கொடுத்த நீரைக் கையில் வாங்கிக் கொண்டார்.
நீர் வழங்கிய வழிப்போக்கர்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்தார். ஆனால், அந்த தண்ணீரைக் குடிக்காமல் கொடுத்தவர்களிடமே திருப்பிக் கொடுத்தார்.
கொடுத்ததும் சொன்னார், "இதை நான் மட்டும்_அருந்தினால் இதயம் அற்றவனாகி விடுவேன். என்வீரர்களும் என்னைப் போலவே தாகத்தில்தான் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் "
தலைமைப்பண்பு என்பது இதுதான்.
அலெக்சாண்டர் என்ற பேருள்ளம் கொண்ட மாவீரனின் பேரன்பால்,நேயத்தால் சிப்பாய்களின்தாகம் நீர் அருந்தாத போதும் தணிந்தது.
அலெக்சாண்டரின் செயலைக்கண்ட அத்தனை வீரர்களுக்கும் தடைகளை உடைத்து போரில் முன்னேற மேலும் துணிவும் உறுதியும் விசுவாசமும் வந்தது. அவர்களின் உள்ளங்கள் அலெக்சாண்டரின் பாதுகாப்புக் கேடயங்களாாயின.
போரில் மாபெரும் வெற்றிக் கண்டார்கள்.
தலைமைப்பண்பு என்பது தன்கீழ் பணியாற்றும் வீரர்களுக்கு அணையிடுவது மட்டுமல்ல. வீரர்களின் உள்ளங்களில் நிறைந்துகிடப்பது.
தழும்புகளையும் தாங்குவது. பொறுப்புகளையும் சுமப்பது. காயங்களுக்கு மருந்திடுவது.
- 1707