ஹெஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தலைவராக ஹஷேம் சஃபிதீன் பதவியேற்றுள்ளார்.
சஃபிதீன், 32 ஆண்டுகள் ஹெஸ்புல்லாவின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார்.
நஸ்ரல்லாவைப் போலவே இருக்கும் சஃபிதீன் ஹெஸ்புல்லா இயக்கத்தில் ஆரம்பம் முதலே இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.
ஈரானில் தனது படிப்பினை நிறைவு செய்த அவர், 1990ஆம் ஆண்டு மீண்டும் லெபனானுக்கு அழைக்கப்பட்ட போது நஸ்ரல்லாவின் வாரிசாக நியமிக்கப்பட்டார்.
இதேவேளை ஹெஸ்புல்லா இயக்கத்தின் நிர்வாக சபையின் தலைவராகவும் சஃபிதீன் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- 1717