ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் மூலம் தங்களது ஒரு நோக்கம் நிறைவேறியதாகவும் அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான தமது விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பிய நிலையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், இஸ்ரேல் தமது எதிரிகளைத் தொடர்ந்து தாக்குவதில் உறுதியாக இருப்பதாகதாகவும் அவர் கூறியுள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதலில் தங்களது தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹெஸ்புல்லா தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தநிலையில், லெபனானில் 3 நாட்கள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று 33 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், மேலும் 195 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட டஹியில் இஸ்ரேல் தமது தாக்குதல்களை இலக்காகக் கொண்டுள்ளது.இது ஹெஸ்பொல்லாவின் கோட்டையாகவும் உள்ளது
இதேவேளை, லெபனான் மற்றும் இஸ்ரேலிய வான்வெளியில் விமான பயணங்களை முன்னெடுப்பதை நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- 1931