இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று நிறைவடைந்துள்ளது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 7 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக கமிந்து மெண்டிஸ் 114 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதன்மூலம் இலங்கை அணிக்காகக் குறைந்த போட்டிகளில் அதிக சதங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார். இதன்படி கமிந்து மெண்டிஸ் 11 இன்னிங்ஸ்களில் 4 சதங்களைப் பெற்றுள்ளார்.
000
- 1865