எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களிலுள்ளும் தடைவிதிக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்றையதினம் (18) விசேட ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது -
வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களினுள்ளும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதும், அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்ந்துகொள்வது அத்தியாவசியமானது என்பதும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுக்கும் வலியுறுத்தப்படுகிறது.
கையடக்கத் தொலைபேசிகளைப் பாவித்தல் நிழற்படமெடுத்தல் வீடியோ செய்தல் ஆயுதங்களை தம் வசம் வைத்திருத்தல் புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் மற்றும் வேறு போதைப்பொருள்களைப் பாவித்தல்.
மதுபானம் அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள்களைப் பாவித்துவிட்டு வருகை தருதல் என்பன தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
000
- 1856