அனைத்து வாக்கு கணக்கெடுக்கும் மையங்களிலும் இரண்டாம் விருப்பத்தேர்வை எண்ணுவதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக தயார் செய்யுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
அதன்படி, கூடுதல் அலுவலர்களை தயார்படுத்தும் பணியில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் வட்டார தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த 10 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களின் எண்ணிக்கை 1274 ஆகும்.
இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
000
- 1847