ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக மேலதிக பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அன்றையதினம் மேலதிக தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளதுடன் தனியார் பேருந்து ஊழியர்களும் வாக்களிக்க செல்வதே காரணம் என கூறப்படுகிறது.
மேலும் இதற்காக கூடுதல் புகையிர சேவைகளை நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அத்துடன் ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி நீண்ட தூர சேவைகளுக்காக புகையிரதம் இயக்கப்படும் என்றும், குறுகிய தூர புகையிரதம் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் குறிப்பிடப்பட்டுள்ளது
000
- 1264