கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருவரும் 20 வயதுகளை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரிப்வுட் மற்றும் ஜேன் ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் கிடந்ததாக தெரிவிக்கின்றனர்.
உயிர்காப்பு பணியாளர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சித்த போதும் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இரு தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
- 1670