பாரிஸில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக இடம்பெற காரணமாக இருந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சார பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ”Merci” எனும் ஒற்றை வார்த்தையுடன் கூடிய பதாகைகள், சுவரொட்டிகளை நாளை முதல் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கும். இந்த நடவடிக்கைகாக 1,500 சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுள்ளன. 350 இடங்களில் அவை ஒட்டப்பட உள்ளன. மேலும் 1,100 இடங்களில் பதாகைகளும் நிறுவப்பட உள்ளன.
மேலும், ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர், “உலக மக்களை பாரிஸுக்கு வரவேற்கிறோம் எனும் தொனிப்பட ”la bienvenue à Paris au monde entier” எனும் வார்த்தைகளை அச்சிட்டு இதுபோல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தது.
- 1706