பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கிப் பயணித்த ஏதிலிகள் படகு விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
சட்டவிரோதமான முறையில் ஆங்கில கால்வாய் ஊடாக பயணிக்கும் ஏதிலிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது காயமடைந்த 6 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 59 பேர் குறித்த படகில் பயணித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 2 நாட்களில் மாத்திரம் ஆங்கில கால்வாயை 200க்கும் அதிகமான ஏதிலிகள் கடக்க முயன்றதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
000
- 1660