Feed Item
·
Added a post

விமானம் க்ளீன் செய்யும் பணியாளர் ஒருவன் விமானத்தை துடைத்து கொண்டு இருந்தார்!

அப்பொழுது விமானியின் அறையில் ஒரு புத்தகம் இருந்தது!

எளிதாக விமானத்தை ஓட்டுவது எப்படி!

ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தான்!

விமானம் இஞ்சின் ஸ்டார்ட் ஆக முதலில் பச்சை பட்டனை அமுக்கவும்.

அப்படியே செய்தான் ! விமான என்ஜின் ஸ்டார்ட் ஆனது!

ஓடு தளத்தில் ஓட நீல நிற பட்டனை அழுத்தவும்! என்று இருக்க அவன் அதை செய்ய ஓடு தளத்தில் வேகமாக ஓடியது.

அப்புறம் அடுத்து கருப்பு நிற லிவரை கீழே தள்ளினால் விமானம் மேலே பறக்கும் என்று எழுதி இருக்க!

அதையே செய்தான் !

இப்பொழுது விமானம் உயரமாக பறக்க ஆரம்பித்தது.

அரை மணி நேரம் மகிழ்ச்சியாக பறந்த பின் சரி விமானத்தை தரை இறக்கலாம் என்று புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திருப்ப !

" விமானத்தை எப்படி இறக்குவது என்பதற்கு எங்கள் புத்தகத்தின் இரண்டாவது பாகத்தை வாங்குங்கள் என்று இருந்தது!

நீதி - எதையும் முழுதுமாக தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்க கூடாது!

  • 1886