Feed Item

தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 30 ஆம் தேதி

மேஷம் -ராசி:

பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உறவினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். பயணங்களால் புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் மேம்படும். எதிர்ப்பு விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

ரிஷபம் ராசி:

எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் சாதகமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சகோதரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். போட்டி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செம்மஞ்சள்

மிதுனம் -ராசி:

மறைமுகமாக விமர்சனங்கள் தோன்றி மறையும். கணிதம் சார்ந்த தொழில்களில் கவனம் வேண்டும். விவாதங்களில் நிதானத்துடன் இருக்கவும். வரவுகள் இருந்தாலும் அதற்குகேற்ப செலவுகளும் இருக்கும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். விவேகம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

கடகம் -ராசி:

நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அச்சம் மறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

சிம்மம் -ராசி:

தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

 

கன்னி -ராசி:

புத்திரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அறிவியல் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமாக இருந்துவந்த இன்னல்கள் விலகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

துலாம் -ராசி:

கல்வி சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த குழப்பம் குறையும். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இயற்கை மருத்துவம் சார்ந்த தேடல் உண்டாகும். மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் ஏற்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொறுமை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்

விருச்சிகம்- ராசி:

பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடினமான செயல்களை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெருமை நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

தனுசு -ராசி:

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். பற்கள் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தனிப்பட்டு செயல்படுவதில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

மகரம் -ராசி:

பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் நன்மதிப்பு ஏற்படும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்பான சூழ்நிலை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவுகளை குறைப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். ஆக்கப்பூர்வமான நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கும்பம் –ராசி:

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். செயல்பாடுகளில் அலட்சியப்போக்கு இனறி செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். அமைதி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்

மீனம் -ராசி:

மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டாகும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிதல் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 2051