எதிர்வரும் 5 வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பொது அவர் மேலும் கூறுகையில் - வடக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளை, அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது.
வடக்கிற்கு அபிவிருத்தியும் அவசியம். ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடும். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை முன் கொண்டு செல்ல வேண்டும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்து அதனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.
இந்தநிலையில், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்கான தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
000
- 2228