Feed Item
·
Added a news

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகர் “போர்ட் பிளேயர்” பெயர் “ஸ்ரீ விஜயபுரம்” என மாற்றம் செய்யப்பட்டவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அந்தமான், நிக்கோபார் தீவுகள் வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் உள்ளது.

தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை மாற்றவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்றவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை (13) வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில்,

காலனி ஆதிக்க (ஆங்கிலேய ஆட்சியின்) முத்திரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற (இந்திய) பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் உத்வேகம் பெற்று போர்ட் பிளேயர் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

சோழ பேரரசின் கடற்படை தளமாக செயல்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் நாட்டின் சுதந்திர போராட்ட வரலாற்றில் ஈடுஇணையற்ற இடம்பிடித்துள்ளது. தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தளமாகவும் திகழ்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.

  • 1557