Feed Item
·
Added article

பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் நடித்த படம் சர்தார். அந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதே போல பாலிவுட்டில் விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் இணைந்து பார்ஸி வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த சீரிஸின் வெற்றியால் அவர் இந்தியா முழுவதும் அறிந்த நடிகையானார். இதையடுத்து சுந்தர் சி யின் பேய்வரிசை படமான அரண்மனை 4 ல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் தீவிரமாக பதிவுகள் போட்டுவரும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஜொலிக்கும் ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன. 

  • 1004