Feed Item
·
Added article

நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு மீது மோதி, இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. லேசான காயங்களுடன் ஜீவாவும் அவரது குடும்பத்தினரும் உயிர் தப்பி இருக்கின்றனர்.

காருக்குள் இருந்தது ஜீவா எனத் தெரிந்ததும் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து மாற்று காரில் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு ஜீவா அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

  • 660