ஏழை சிறுவன் ஒருவன் , தனது விலை உயர்ந்த காரை வியப்புடன் பார்ப்பதை பார்த்த ஒருவர் , அந்த சிறுவனை உக்காரவைத்து கொஞ்சதூரம் ஓட்டினார். "உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை?" என சிறுவன் கேட்டான்.
" தெரியவில்லை.., இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது" என்றார் அந்த மனிதர்.
"அப்படியா.. அவர் மிகவும் நல்லவர்" என சிறுவன் சொல்ல,
"நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா?"
சிறுவன் சொன்னான்...
"இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப் போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்''..
- 1195