தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 26 ஆம் தேதி
மேஷம் -ராசி:
அரசு துறைகளில் அலைச்சல் அதிகரிக்கும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குழந்தைகளின் வழியில் பொறுமை காக்கவும். பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம் ராசி:
கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கற்பனை கலந்த உணர்வுகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மிதுனம் -ராசி:
கலை துறைகளில் ஈடுபாடு உண்டாகும். இலக்குகளை அடைய நம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். பணிகளில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மறதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம் -ராசி:
வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி நிறைவேறும். அயல்நாட்டு பொருட்கள் மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம் -ராசி:
உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் உண்டாகும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
கன்னி -ராசி:
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
துலாம் -ராசி:
வாத திறமையால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சேமிப்புக்கான வரவுகள் மேம்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
விருச்சிகம்- ராசி:
மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிலும் பகுத்தறிந்து செயல்படும் எண்ணம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எந்த ஒரு செயலிலும் திருப்தியின்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு -ராசி:
வேள்வி பணிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளி வட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிர்வாகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வாழ்க்கை துணைவருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். நிதானம் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
மகரம் -ராசி:
மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். சபை நிமித்தமான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
கும்பம் –ராசி:
வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கூட்டாளிகளின் ஆதரவால் நன்மை உண்டாகும். நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் ஏற்படும். சாதனை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம் -ராசி:
தந்தைவழி உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தனித்திறமைகளை புரிந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். நீண்டதூர பயணம் சார்ந்த எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 1233