குறித்த திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு இன்று (11) மற்றும் நாளை (12) ஆகிய இரு தினங்கள் மேலதிகமாக வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களும் இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியும்.
தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு நாட்களில் தபால் வாக்குகளைப் பயன்படுத்த முடியாவிட்டால், வேறு எந்த நாளையும் அதற்குப் பயன்படுத்த முடியாது என்றும், செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.
தேர்தல் நடத்தப்படும் தினத்தில் அதே வாக்கைப் பயன்படுத்த முடியாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
000
- 1294