தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 25 ஆம் தேதி
மேஷம் -ராசி:
எதிலும் கோபமின்றி செயல்படவும். வர்த்தகப் பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். புதிய கண்ணோட்டம் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். முக்கியமான வேலைகளை மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செய்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
ரிஷபம் ராசி:
சுபகாரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம்
மிதுனம் -ராசி:
கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புரிதல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
கடகம் -ராசி:
புதுவித பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். புதிய நபர்களால் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம் -ராசி:
எதிர்பாராத பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். சுப முயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு செயல்பாடுகளில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி -ராசி:
விலை உயர்த்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். அடிப்படை கல்வியில் முனேற்றமான வாய்ப்புகள் அமையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம் -ராசி:
குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்- ராசி:
முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். எண்ணியதை வித்தியாசமான முறையில் நிறைவேற்றுவீர்கள். விற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு -ராசி:
பெரிய முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பணிகளில் இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மகரம் -ராசி:
சிகை அலங்கார பணிகளில் லாபம் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தேவையற்ற வாதங்களினால் விரயங்கள் நேரிடும். மனதில் அந்நிய தேச பயணம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம் –ராசி:
பேராசை இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். சவாலான வாதங்களையும் சமாளிப்பீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேளாண்மை துறைகளில் ஆலோசனைகள் மூலம் தெளிவு பிறக்கும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம் -ராசி:
செல்வச் சேர்க்கையை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விவேகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 2155