கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்கப்படவுள்ளன.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் மற்றும் முகமாலை பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகளே அகற்றப்பட்டுள்ளன.
இதன்படி, 11 இலட்சத்து 42 ஆயிரத்து 563 சதுரமீற்றர் பகுதியிலுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள பகுதிகளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
- 2006