Feed Item
·
Added a news

இந்திய குடிமக்கள் மீது இந்தியை திணித்தது யார்? பிரதமர் மோடியா? காங்கிரசா? என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, 2020ல் கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கை தான் முதன்முறையாக தாய்மொழியில் கற்பதை வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய குடிமக்கள் மீது இந்தியை திணித்தது யார்? பிரதமர் மோடியா? காங்கிரசா? இந்தி திணிப்பு போன்ற இல்லாத விஷயங்களை ராகுல் பேசியுள்ளார் என்றும் ராகுலின் பாட்டி இந்திரா காலத்திலிருந்து தேசிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம் என இருந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழன் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றது பிரதமர் மோடி என அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.  ஆனால் அன்னிய மண்ணிலிருந்து தமிழ்நாட்டை இழிவுபடுத்தியது ராகுல் காந்தி என அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி தங்கள் தாய்மொழிக்காக என்ன செய்தார் என்று பலர் கேள்வி கேட்கலாம் என்றும் பிரதமர் மோடி நமது தாய்மொழியான தமிழுக்கு என்ன செய்தார் என்பதை வெளிப்படுத்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

74 வது ஐநா பொதுச் சபையில் முதன்முறையாக பிரதமர் மோடி தமிழில் பேசியதை சுட்டி காட்டிய அண்ணாமலை,  யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று பிரதமர் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார். மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவாக, அவரது பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கப்பட்டது என்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • 1588