சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் மனசிலாயோ இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலுக்கு சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதி உள்ளனர். அனிருத், யுகேந்திரன் வாசுதேவன், தீப்தி சுரேஷ் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தி உள்ளனர் என்பதும் 27 ஆண்டுகளுக்கு பின்னர் மலேசியா வாசுதேவன் குரலை ரசிகர்கள் கேட்க முடிந்தது ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- 1244