Feed Item
·
Added a news

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு ஒன்பது விக்கெட்டுகள் மீதமிருக்க 125 ஓட்டங்கள் மாத்திரம் தேவை என்ற நிலை உள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதலிரு போட்டிகளையும் இங்கிலாந்து அணி வெற்றி கொண்டு தொடரில் முன்னிலையில் இருக்க, இறுதி டெஸ்ட் போட்டி லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 325 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, தனது முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களை எடுத்தது.

இதனால், 62 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வெறும் 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்து வீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளை அதிகபடியாக எடுத்தார். அதன்படி, இலங்கையின் வெற்றிக்கு 219 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கனை நோக்கி துடுப்பெடுத்தாடி வந்த இலங்கை, போட்டியின் மூன்றாம் நாள் (நேற்று) ஆட்ட நிறைவில் 15 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்றுள்ளது.

திமுத் கருணாரத்ன 8 ஓட்டங்ளுடன் ஆட்டமிழக்க, பத்தும் நிஸ்ஸங்க 53 ஓட்டங்களுடனும், குசல் மெண்டீஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.

000

  • 1171